உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன் விரோத தகராறு; 4 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு; 4 பேர் மீது வழக்கு

போடி : போடி அருகே சிலமலை டி.எஸ்.பி., காலனியை சேர்ந்தவர் செண்பகராஜா 29. இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் 47. துரைப்பாண்டிக்கும் கோயில் கும்பிடுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. நேற்று பாலமுருகன், துரைப்பாண்டி இருவரும் சேர்ந்து செண்பகராஜாவை தகாத வார்த்தையில் பேசி அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர்.இது போல இதே பகுதியை சேர்ந்தவர் ராமர் 49. இவருக்கும் சிலமலை பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார் 37., அரசமரத்து தெருவை சேர்ந்த சோலைப்பாண்டியன் 58. என்பவர்களுக்கும் கோயில் கும்பிடுவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது.செல்வகுமார், சோலைப் பாண்டியன் இருவரும் சேர்ந்து நேற்று ராமரை தகாத வார்த்தையால் பேசி, கையால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். செண்பகராஜ் புகாரில் பாலமுருகன், துரைப்பாண்டி மீதும், ராமர் புகாரில் செல்வகுமார், சோலைப்பாண்டியன் மீதும் போடி தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை