உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பைபாஸ் சந்திப்புகளில் எரியாத உயர்கோபுர மின் விளக்குகள் அவதியில் சபரிமலை பக்தர்கள்

பைபாஸ் சந்திப்புகளில் எரியாத உயர்கோபுர மின் விளக்குகள் அவதியில் சபரிமலை பக்தர்கள்

கம்பம்: மாவட்டத்தில் பைபாஸ் சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால் சபரிமலை செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.தேனியில் இருந்து குமுளி வரை தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.- ஒவ்வொரு பைபாஸ் ரோட்டிலும் ஆரம்பம் முதல் முடியும் இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து எளிதாக நடைபெற வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த உயர்கோபுர மின்விளக்குகள் சமீபகாலமாக எரிவதில்லை. எரியும் ஒரு சில இடங்களில் மின்மினி பூச்சிகளில் இருந்து வெளிவரும் வெளிச்சமாக, 'வோல்டேஜ்' பற்றாக்குறையாக உள்ளது. குறிப்பாக உத்தமபாளையம் பைபாஸ் நுழையும் இடம், கம்பம் பைபாஸ் முடியும் இடம், சின்னமனுார் பைபாஸ் நுழையும் இடம் உள்ளிட்ட பல சந்திப்புகளில் உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை. விளக்குகள் எரியும் போதே விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிலும் மூன்று திசைகளில் இருந்தும் வாகனங்கள் வரும் பைபாஸ் சந்திப்புக்களில் விளக்குகள் எரியாவிட்டால் நிலைமை என்னவாகும்.தற்போது சபரிமலை மகரவிளக்கு உற்ஸவம் என்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சரியான போக்குவரத்து சிக்னல்கள் இல்லாததால் குழம்பிப் போகின்றனர். இந்நிலையில் பைபாஸ் சந்திப்புகளில் வெளிச்சம் இல்லாவிட்டால் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் பைபாஸ் சந்திப்புக்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும், என ஐயப்ப பக்தர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை