உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெல் தரிசில் பயறு சாகுபடி செய்ய 50 சதவீத மானியத்தில் விதைகள்

நெல் தரிசில் பயறு சாகுபடி செய்ய 50 சதவீத மானியத்தில் விதைகள்

சின்னமனூர் : நெல் சாகுபடிக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தின் கீழ் உளுந்து, பாசிப்பயறு விதைகள் 50 சதவீத மானியத்தில் விற்பனைக்கு தயாராக உள்ளது.சின்னமனூர் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறியதாவது: கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை 54, ஆர். என்.. ஆர். கோ 52 போன்ற பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . இம் மாத இறுதியில் அறுவடை துவங்க வாய்ப்புகள் உள்ளது. அறுவடையான நெல் வயலில் மீண்டும் முதல் போக சாகுபடி ஜுனில் நடைபெறும். ஏப்ரல், மே மாதங்களில் நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி செய்யலாம்.இதற்கென உளுந்து, பாசிப்பயறு விதைகள் 50 சதவீத மானியத்தில் விற்பனைக்கு தயாராக உள்ளது. விதைகள் பெற விரும்பும் விவசாயிகள் சின்னமனூர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி