| ADDED : நவ 25, 2025 01:31 AM
தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த தடகள போட்டிகளில் மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதலிடம் வென்ற மாணவிகள் தேசிய போட்டிகள் தேர்வாகினர். இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 14,16 வயது மாணவிகளை போட்டிகளுக்கு தேர்வு செய்ய 'அத்தலடிக் பெடரேஷன் ஆப் இந்தியா' சார்பில் தேசிய அளவில் 300 மாவட்டங்களில் அஸ்மிதா லீக் தடகளப்போட்டி தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் தேனி உட்பட 17 மாவட்டங்களில் வீராங்கணைகள் தேர்வு நடக்கிறது. தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் டிரையத்லான் ஏ போட்டியில் ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹேமஹாசினி, டிரையத்லான் பி போட்டியில் தேனி பி.சி., கான்வென்ட் கவுசிகா, டிரையத்லா சி போட்டியில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி அஸ்மிதா, ஈட்டி எறிதலில் ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி சபிராஸ்ரீ முதலிடம் வென்றனர். 16 வயது பிரிவில் 60 மீட்டர் ஓட்டம் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி தேசிகாஸ்ரீ, குண்டு எறிதலில் காமாட்சிபுரம் பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மோகனபிரியா, ஈட்டி எறிதலில் ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., தாரிகா, ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் லத்திகா 600 மீ., ஓட்டம் , நீளம் தாண்டுதலில் கபிஷா, உயரம் தாண்டுதலில் ஜோஸ்ணி, தட்டு எறிதலில் தீபிகா ஆகியோர் முதலிடம் வென்றனர்.