| ADDED : பிப் 25, 2024 04:21 AM
போடி : போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இடைவிடாது தொடர்ச்சியாக திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளனர்.அனைவரும் திருக்குறள் படிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு திருக்குறளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் இணைந்து இடை விடாது திருக்குறள் ஒப்புவிக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. தேனி வையைத் தமிழ் சங்க நிறுவனர் இளங்குமரன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராஜமுருகன், பள்ளி செயலாளர் ராமசுப்பிரமணியன், தலைமையாசிரியர் சதீஷ்குமார், தமிழ் புலவர் முத்துகாமாட்சி முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் லட்சுமி வரவேற்றார்.முதல் வகுப்பில் இருந்து 8 ம் வகுப்பு வரை படிக்கும் 283 மாணவர்கள் அனைவரும் இடை விடாது தொடர்ச்சியாக 1330 குறள்களை 107 நிமிடங்களில் ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி ஆசியன் புக் ஆப் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனர் விவேக், ஆல் இந்தியா புக் ஆப் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.