உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டுக்கு பணம் தேனியில் பட்டுவாடா

ஓட்டுக்கு பணம் தேனியில் பட்டுவாடா

தேனி : தேனியில் ஓட்டுக்கு 1500 ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா, துவங்கி உள்ளது. தேனி 33 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர். ஒரு வேட்பாளர் ஓட்டுக்கு ஆயிரத்து 500 ரூபாய் பட்டுவாடா செய்து வருகிறார். இவ்வார்டில் உள்ள ஆயிரம் ஓட்டுக்கு, 15 லட்சம் ரூபாய் தர முடிவு செய்துள்ளாராம். மற்றொரு கட்சி வேட்பாளர் ஓட்டிற்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறார். மற்ற வேட்பாளர்களும் பணம் தர திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை