உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காணாமல் போன பெண் உடல் மீட்பு

காணாமல் போன பெண் உடல் மீட்பு

தேனி : ஆண்டிபட்டி மூணாண்டிபட்டியை சேர்ந்த ஒச்சு மனைவி தங்கம்மாள் (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 20 நாட்களாக தங்கம்மாளை காணவில்லை.ஆண்டிபட்டி போலீசார் தங்கம்மாளை காணவில்லை என வழக்கு பதிவு செய்து, தேடி வந்தனர். அவரது உடல் போடி மெட்டு 10வது கொண்டை ஊசி வளைவு மலைப்பகுதியில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. ஒச்சு சில நாட்களுக்கு முன் மனைவியை கொலை செய்ததாக உசிலம்பட்டி கோர்ட்டில் சரணடைந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ