உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் தடையை மீறி பாலத்தில் வியாபாரம்

மூணாறில் தடையை மீறி பாலத்தில் வியாபாரம்

மூணாறு: மூணாறில் இரும்பு பாலத்தில் தடையை மீறி வியாபாரம் நடக்கிறது.மூணாறில் மாட்டுபட்டி ரோட்டையும், நகரையும் இணைக்கும் வகையில் முதிரைபுழை ஆற்றின் குறுக்கே இரும்பு பாலம் உள்ளது. இப்பாலத்தின் இரும்பு தூண்கள் மக்கி ஆபத்தாக உள்ளன. அதனை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.இந்நிலையில் பாலத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் பல்வேறு பொருட்களை விற்பனை செய்தனர். அவை பொது மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் நடந்து செல்ல இயலாத வகையில் இடையூறாக இருந்தன. அதனால் பாலத்தில் வியாபாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டு அங்கு போலீசார் சார்பில் போர்டு வைக்கப்பட்டது. இருப்பினும் அதனை மீறி வியாபாரம் நடக்கிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் பாலத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை