உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டாக்டர் வீட்டு மாடியில் வாட்ச்மேன் தற்கொலை

டாக்டர் வீட்டு மாடியில் வாட்ச்மேன் தற்கொலை

பெரியகுளம் : தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விவேகானந்தன் 45. பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயபிரகாஷ் வீட்டில் 10 ஆண்டுகளாக வாட்ச்மேன் பணியில் இருந்தார். தினமும் மதியம் 3:00 மணிக்கு தேனியில் இருந்து பெரியகுளம் சென்று இரவில் வாட்ச்மேன் பணி முடிந்து காலை 7:00 மணிக்கு தேனிக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 6:30 மணிக்கு விவேகானந்தன், டாக்டர் வீட்டு மாடியில் நாய் கட்டும் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தென்கரை எஸ்.ஐ., அனுசுயா, விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ