உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நீர்வளத்துறையினர் தகவல்

 நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நீர்வளத்துறையினர் தகவல்

தேனி: தேனி மந்தைகுளத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுடன் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மந்தை குளத்தில் ஆக்கிரமித்து வீடுகள், கட்டுமானங்கள் அமைத்துள்ள 96பேருக்கு கடந்த மாதம் நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதில் ஆக்கிரமித்த இடத்தை காலி செய்யும் படி குறிப்பிடபட்டிருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இந்நிலையில் இம்மாதம் இரண்டாவது முறையாக நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்களுடன் தேனி தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை உதவி பொறியாளர் அரவிந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை