உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி 48. இவரது மனைவி ராணி 36. இருவரும் செங்கல் காளவாசலில் வேலை செய்தனர். இவர்களுக்கு பவித்ரா, புவனேஸ்வரன் இரு பிள்ளைகள் உள்ளனர். புவனேஸ்வரன் மனநலம் சரியில்லாமல் இருந்தார். இவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவ செலவிற்கு ராணி, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியிடம் ரூ.1 லட்சம் வாரக் கடன் பெற்று, இதற்கு வாரத்தவணையாக ரூ.3 ஆயிரம் செலுத்தி வந்துள்ளார். இதேபோல் கண்ணன், கிருஷ்ணம்மாளிடம் ரூ.10 ஆயிரம் பெற்றுள்ளார். காளவாசல் வேலை இல்லாததால் வட்டி கட்ட முடியாமல் சிரமம் அடைந்தார். இந்நிலையில் பணம் கொடுத்த மூன்று பேரும், பணம் கேட்டு ராணியை சத்தம் போட்டனர். இதனால் மன வேதனையில் ராணி விஷமருந்து குடித்தார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை