உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறில் மகளிர் ஆணையம் அதாலத்: 22 புகார்களுக்கு தீர்வு

மூணாறில் மகளிர் ஆணையம் அதாலத்: 22 புகார்களுக்கு தீர்வு

மூணாறு: மூணாறில், இடுக்கி மாவட்ட அளவில் மகளிர் ஆணையம் சார்பிலான அதாலத் தலைவர் சதிதேவி தலைமையில் நடந்தது.உறுப்பினர்கள் இந்திராரவீந்திரன், எலிசபத்மாமன் மத்தாயி, குஞ்சாயிஷா, மகிளாமணி ஆகியோர் பெண்களுக்கு எதிரான பிரச்னைகளை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அக்குழு சார்பில் இடுக்கி மாவட்ட அதாலத் மூணாறில் நடந்தது. அதில் வழங்கப்பட்ட 66 புகார்களில் 22 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. ஆறு புகார்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. திருமணம் பந்தம் தொடர்பான இரண்டு புகார்களில் தம்பதியர்களை கலந்தாய்வு உட்படுத்த பரிந்துரைக்கப்பட்டது. எஞ்சிய 36 புகார்கள் அடுத்த அதாலத்தில் விசாரிக்கப்படும் என ஆணையம் குழு தலைவர் சதிதேவி தெரிவித்தார். தம்பதியினர் இடையே முரண்பாடு, குடும்ப பிரச்னை, பணியின்போது பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கந்து வட்டி கொடுமையால் பாதிப்பு உள்பட பெண்களுக்கு எதிரான பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ