உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத கோயிலில் யாக பூஜை

மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத கோயிலில் யாக பூஜை

பெரியகுளம் : பள்ளி மாணவ, மாணவிகள் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளை சிறப்பாக எழுத கோபாலகிருஷ்ணன் கோயிலில் நடந்த சிறப்பு யாக பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.பெரியகுளம் தென்கரை கிருஷ்ணன் கோவில் தெரு கோபாலகிருஷ்ணன் கோயிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் பூஜை நடந்தது. அர்ச்சகர் கண்ணன் தலைமையில் பகவத் பிரார்த்தனை, புண்யாஹ வாசனம், அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை, மூலமந்திர ஜபம், பாராயணம், மூலமந்திர ஹோமம், விசேஷ பூஜை தீபாராதனை நடந்தது. மாணவ, மாணவிகள் உடல்,மன வலிமையுடன் தேர்வில் வெற்றி பெற யாகசாலை பூஜை நடந்தது. ஏராளமான மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர். பூஜிக்கப்பட்ட நோட்டு, பென்சில், பேனா,ஸ்ரீ ஹயக்ரீவர் படம், குங்குமம், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை