மேலும் செய்திகள்
சிலிண்டர் வெடித்து பெண் பலி ரூ.23.89 லட்சம் வழங்க உத்தரவு
19-Feb-2026 | 2
கூட்டணி கட்சிகள் குறித்து சர்ச்சை பேச்சு
15-Feb-2026 | 1
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 பெண்கள் கைது
14-Feb-2026
சாலைக்கு பெயர் சூட்டல்
13-Feb-2026
வள்ளியூர் : வள்ளியூர் அருகே கலந்தபனையில் இலவச ரத்தவகை கண்டறியும் சிறப்பு முகாம் நடந்தது.வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் முத்துவேலர் அமராவதி டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச ரத்தவகை கண்டறியும் சிறப்பு முகாம் கலந்தபனை டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பர்னபாஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயகுமார் வரவேற்றார். உதவி தொடக்ககல்வி அலுவலர் கிறிஸ்டோபர் முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் 70 குழந்தைகளுக்கு இலவசமாக ரத்தவகை கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர் சங்கரன், சென்டரல் ரோட்டரி சங்க செயலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் முருகன், பார்வதி சங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
19-Feb-2026 | 2
15-Feb-2026 | 1
14-Feb-2026
13-Feb-2026