மேலும் செய்திகள்
கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்
04-Nov-2025 | 1
நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது
04-Nov-2025
போலி ஆவண மோசடி: சார்பதிவாளர் மீது வழக்கு
03-Nov-2025
கார் ஓட்டிய 17 வயது மகன் தந்தை கைது
02-Nov-2025 | 2
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான மனோ கல்லூரி உள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே பஸ் ஸ்டாண்டில் இரு அணிகளாக பிரிந்து அலைபேசியில் ஆன்லைன் கேம் விளையாடினர்.இரு தரப்பிற்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலானது. கங்கனாங்குளம் பகுதியில் இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். ஒரு தரப்பினருக்கு ஆதரவாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எதிர்தரப்பு மாணவர்களை தாக்கினர்.சேரன்மாதேவி போலீசார் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் மீதும், மற்றொரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீதும் என 21 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். கங்கனான்குளத்தை சேர்ந்த சின்னராஜு 26, பாலகிருஷ்ணன் 25, மகேஷ் 21, அந்தோணிதாசன் 46, பட்டுசுந்தர் 38, தங்கம் 24, மற்றும் 2 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலரை தேடி வருகின்றனர்.
04-Nov-2025 | 1
04-Nov-2025
03-Nov-2025
02-Nov-2025 | 2