உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பட்டுவாடா செய்தவரை பொதுமக்கள் பிடித்தனர்

பட்டுவாடா செய்தவரை பொதுமக்கள் பிடித்தனர்

திருநெல்வேலி:திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் வந்தன. சீவலப்பேரியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் குறித்து தகவல் வந்ததால், பறக்கும் படையினர் அவர்களை துரத்தினர். 65 ஆயிரம் ரூபாயை ரோட்டில் வீசிவிட்டு இருவர் தப்பினர். இதில் இன்னொரு நபரை பிடித்து விசாரிக்கின்றனர்.தச்சநல்லுாரில் வீடு வீடாக பணம் வினியோகித்த தி.மு.க., ஆதரவாளர்கள் கிருஷ்ணகுமார், கண்ணன் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது. ''தொகுதி முழுதும் பல்வேறு இடங்களில் பணப் பட்டுவாடா நடப்பது குறித்து புகார் வந்தாலும் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என பா.ஜ., பிரமுகர் பாலாஜி கிருஷ்ணசாமி, தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venkatakrishna
ஏப் 18, 2024 21:19

கோடி பணம் ரயிலில் பிடித்ததும் பிஜேபிக்கு அவப்பெயர் ஏற்படுத்த இந்த ஆளும்கட்சியின் ஏற்பாடாக இருக்கும் என்று கட்சிக்காரர்களே கூறுகிறார்கள்


Jysenn
ஏப் 18, 2024 14:01

only seize the money meant for the hospital expenses


Kanns
ஏப் 18, 2024 09:41

Shameless Murder of Democracy by Ruling Party Govts, Official doms esp Police & CourtJudges


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை