உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனுமதியின்றி இயங்கிய 2 தொழிற்சாலைகளுக்கு சீல்

அனுமதியின்றி இயங்கிய 2 தொழிற்சாலைகளுக்கு சீல்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் அனுமதியின்றி தொழிற்சாலை இயங்கி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, நேற்று முன்தினம் கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர், திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன் மற்றும் வருவாய், ஒன்றிய அலுவலர்கள் தொடுகாடு ஊராட்சியில் இயங்கி வந்த எஸ்.ஆர்.பைல்ஸ் மற்றும் வி.கே.பி., இன்ஜினியரிங் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.மேலும், வி.கே.பி., இன்ஜினியரிங் தொழிற்சாலைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதா அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் மப்பேடு போலீசார் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ