உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் மாநில சிலம்பம் போட்டி தேசிய போட்டிக்கு 27 பேர் தேர்வு

திருத்தணியில் மாநில சிலம்பம் போட்டி தேசிய போட்டிக்கு 27 பேர் தேர்வு

திருத்தணி: திருத்தணி அடுத்த அகூர் நத்தம் பகுதியில் உள்ள டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளி வளாகத்தில், சிலம்பக் கோர்வை இந்தியா சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி நேற்று நடந்தது. சிலம்ப கோர்வை இந்தியா தலைவர் செல்வம் தலைமை வகித்தார். தேசிய சிலம்ப பயிற்சியாளர் வெங்கடேஷ் வரவேற்றார். இதில் திருத்தணி பீகாக் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கிரண், டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளி செயலர் ரவிக்குமார் ஆகியோர் சிலம்பம் போட்டியை துவக்கி வைத்தனர். பள்ளி முதல்வர் கிறிஸ்டினா, சிலம்பக் கோர்வை இந்தியா பயிற்சியாளர் சதீஷ் பங்கேற்றனர்.தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களில் இருந்து, 10 வயது முதல், 17 வயது வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, 200 மாணவியர் உள்பட 600 மாணவர்கள் பங்கேற்றனர்.சிலம்பம் ஆட்டம் தொடுமுறை, தனித்திறமை, இரட்டை கம்பு ஆகிய மூன்று பிரிவுகளில் மாணவர்கள் விளையாடினர். மூன்று பிரிவுகளிலும், ராணிப்பேட்டை மாவட்டம் முதலிடத்தையும், திருவள்ளூர் மாவட்டம் இரண்டாமிடத்தையும், காஞ்சிபுரம் மாவட்டம், மூன்றாமிடத்தையும், சென்னை மாவட்டம் நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 27 மாணவர்கள் அடுத்த மாதம் ஹரியானா அல்லது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை