உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

திருவள்ளூர் : சொத்து வரி முன்கூட்டியே செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் சுபாஷினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் நகராட்சியில் சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி மற்றும் குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 17.05 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. நகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை, முதல் அரையிறுதி காலமான ஏப்.,1-செப்.,-30; இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை அக்.1-மார்ச் 31 வரை செலுத்தலாம்.முதல் அரையாண்டு சொத்துவரி, ஏப்.30க்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை, அக்.31க்குள் செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை