| ADDED : ஜூலை 01, 2024 02:08 AM
ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி -- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஜே.பி.எஸ்டேட், வசந்தம் நகர், கோவர்தனகிரி, ஸ்ரீராம் நகர் மற்றும் பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.ஆவடியில் முக்கிய சாலையாக விளங்கும் இந்த நெடுஞ்சாலை, 3.5 கி.மீ., துாரம் கொண்டது. இந்த நெடுஞ்சாலையில், பல மாதமாக, ஜே.பி.எஸ்டேட் முதல் ஸ்ரீராம் நகர் வரை 2 கி.மீ., துாரத்துக்கு மின் விளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலையில் பல இடங்களில் வேகத்தடை மற்றும் குண்டும் குழியுமாக உள்ளதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்திலேயே தினசரி பயணித்து வருகின்றனர்.அதேபோல, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.