மேலும் செய்திகள்
சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு
30-Dec-2025
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29-Dec-2025
திருவள்ளூர்:தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.திருவள்ளூர் மாவட்டத்திலும் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாவட்ட கலெக்டர் மற்றும் பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறையினர் மக்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது, கோடைவெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெப்ப பக்கவாதம், மயக்கம் போன்ற நோய்கள் தாக்கக்கூடும். எனவே, அடிக்கடி தண்ணீர், பழங்கள், இளநீர், பழச்சாறு, மோர், ஓ.ஆர்.எஸ்., கரைசல் போன்ற நீர் ஆகாரங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.மதியம்,12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மக்கள் அவசர வேலையின்றி வெளியே செல்லக்கூடாது. கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேநீர், காப்பி, குளிர்பானங்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
30-Dec-2025
29-Dec-2025