உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ரேஷன் பொருள் கடத்தலை தடுக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பண்டங்கள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்துார் மாவட்டங்களைச் சேர்ந்த உணவுப்பொருள் வழங்கல், காவல் துறை, ரயில்வே துறை காவலர்கள் மற்றும் மண்டல கண்காணிப்பு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.இதில், தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படும், ரேஷன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சோதனை சாவடிகள், பேருந்து, ரயில் மற்றும் போக்குவரத்து வாகனங்களை கண்காணிக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி கலெக்டர்-பயிற்சி, ஆயுஷ் குப்தா, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி