உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மருத்துவமனை தரம் உயர்த்த கோரி பொதட்டூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

மருத்துவமனை தரம் உயர்த்த கோரி பொதட்டூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலையடிவாரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ள தேவையான உபகரணங்களை நிறுவ வேண்டும்.24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என பகுதிவாசிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். அவசர காலங்களில், திருத்தணி அல்லது சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.30 ஆயிரம் பேர் வசிக்கும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் அரசு மருத்துவமனை இருந்தும், 30 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் எனக்கோரி, மருத்துவமனை வளாகத்தில் நேற்று பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதட்டூர்பேட்டை போலீசார், பகுதிவாசிகளிடம் பேச்சு நடத்தினர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ