| ADDED : ஆக 10, 2024 11:06 PM
திருவள்ளூர்: சீர்மரபினர் இனத்தவருக்கு, பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வாயிலாக, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் சீர்மரபினர்களுக்கு மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற, தரமான பயிற்சி அளித்தல், சுகாதாரம், வாழ்வாதாரம் எளிதாக்குதல், நிலம் மற்றும் வீடு கட்ட நிதியுதவி போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் மத்திய அரசின் www.dwbdnc.dosje.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.