உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டூ- - விலரில் ‛லிப்ட் கொடுக்க மறுத்தவருக்கு அடி

டூ- - விலரில் ‛லிப்ட் கொடுக்க மறுத்தவருக்கு அடி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், 42. இவர், நேற்று முன்தினம் தன் இருசக்கர வாகனத்தை பழுது பார்ப்பதற்காக, திருவாலங்காடு நோக்கி ஓட்டிச் சென்றார்.அப்போது, அரிசந்திராபுரம் அருகே சென்ற போது, இரண்டு வாலிபர்கள், செந்தில் வாகனத்தை நிறுத்தி,' எங்களை ஏற்றிக் கொண்டு செல்லுங்கள்' என கேட்டுள்ளனர்.அதற்கு, 'வாகனம் பழுது பார்க்க தான் ஓட்டிச் செல்கிறேன். தற்போது உங்களை ஏற்றிக் கொள்ள முடியாது' எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த இரு வாலிபர்கள், சராமாரியாக செந்திலை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.அவ்வழியாக சென்றவர்கள் செந்திலை மீட்டு, திருவாலங்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி