உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கடம்பத்துார்:திருவள்ளூர் - கடம்பத்துார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பாச்சூர் ஊராட்சி. இங்குள்ள புதிய திருப்பாச்சூர் பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டி கடந்த 2013-14ம் ஆண்டு 20,000 ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது குடிநீர் தொட்டியின் குழாய் பகுதியில், உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை