உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அபாய நிலையில் குடிநீர் தொட்டி பாப்பரம்பாக்கத்தில் அவலம்

அபாய நிலையில் குடிநீர் தொட்டி பாப்பரம்பாக்கத்தில் அவலம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இங்கு மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி மையம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த குடிநீர் தொட்டி, 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால், குடிநீர் தொட்டி துாண்கள் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன. மேலும் குடிநீர் தொட்டியும் பல இடங்களில் சேதமடைந்து, பரிதாப நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படாமல், குடிநீர் வழங்கப்படுவதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த 2008ம் ஆண்டு, ஐ.எஸ்.ஓ., 9001 தரச் சான்று பெற்ற இந்த ஊராட்சி, அதன்பின் கடந்த 2011-12ம் ஆண்டு தமிழக அரசால் துாய்மையான ஊராட்சிக்கான விருது மற்றும் 2012-13ம் ஆண்டு சிறந்த ஊராட்சிக்கான, பிரதமரின் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டுமென, பாப்பரம்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை