உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா

அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழா

திருவள்ளூர்: திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில், 200 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.திருவள்ளூர், பெரும்பாக்கம், நேதாஜி சாலையில் உள்ள திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத தீ மிதி திருவிழா கடந்த ஆக. 26ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை தீ மிதி திருவிழா நடந்தது.இதில், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வான வேடிக்கையுடன் திரவுபதி அம்மன் திருவீதி உலா நடந்தது.பொன்னேரி, திருவேங்கிடபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் கோவில் அமைந்து உள்ளது. கோவிலின், 45ம் ஆண்டு ஆடித்திருவிழா, வெகு விமரிசையாக நடந்தது. கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து, கரகம் புறப்பாடு, ஊஞ்சல் உற்சவம், ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சிறப்பு அபிஷேக தீபராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு கூழ்வார்த்தல் விமரிசையாக நடந்தது. மாலையில் பெண்கள் வாடை பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். அதையடுத்து, இரவு, 8:00மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பொன்னியம்மன் திருவீதி தீபஆராதனைகளுடன் புறப்பட்டது. மங்கள வாத்தியங்கள் முழுங்க, வாணவேடிக்கைகளுடன் விடிய விடிய திருவேங்கிடபுரம் எல்லைக்கு உட்பட்ட தெருக்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பிற்பகல் 12:00 மணி வரை அம்மன் வீதி உலா முடிந்து, கோவிலுக்கு திரும்பினர். ஆடித்திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வணங்கி சென்றனர். ஊத்துக்கோட்டை அருகே, சூளைமேனி கிராமத்தில் உள்ளது எலமாத்தம்மன் கோவில். கடந்த, 3ம் தேதி காலை, 9:00 மணி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் கூழ் ஊற்றுதல், பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், சிவன் - பார்வதி, திருக்கல்யாண உற்சவம், பெண்கள் முளப்பாரி ஏந்துதல், பால் குடம் எடுத்தல், சவுக்கு மரம் மற்றும் விளையாட்டுகள் ஆகிய நிகழ்ச்சி நடந்தது.தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்தனர். பின் உற்சவர் எலமாத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி