உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வங்கனுாரில் நல்ல பாம்பு மீட்பு

வங்கனுாரில் நல்ல பாம்பு மீட்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார் கிராமத்தின் வடகிழக்கில் சின்ன குளம் அமைந்துள்ளது. இந்த குளக்கரையில் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை ஒட்டி, பாழடைந்த நுாலக கட்டடம் மற்றும் வேளாண் துறை கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த கட்டடங்களில் ஊராட்சியின் பழுதடைந்த குப்பை தொட்டிகள் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காலை இந்த கட்டட வளாகத்தில் நல்ல பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பின், இயற்கை ஆர்வலர் ஒருவர் அந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டார். மீட்கப்பட்ட நல்ல பாம்பு, வங்கனுார் அருகே காப்புக்காட்டில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி