| ADDED : ஜூலை 08, 2024 05:55 AM
திருத்தணி: சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. முருக்கம்பட்டு கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள், வேலஞ்சேரி, பூனிமாங்காடு மற்றும் திருத்தணி மார்க்கத்திற்கு செல்லும் ஒன்றிய தார் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பழுதடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம சபை மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம் முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 1 கோடியே 83 லட்சத்து 77,000 ரூபாய் மதிப்பில் 3.14 கி.மீ., துாரத்திற்கு தார் சாலை சீரமைக்க கடந்த மூன்று மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கி நடந்தன.இந்நிலையில் நேற்று முன்தினம் முருக்கம்பட்டு கிராமத்தில் போடப்பட்ட தார் சாலையை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தார் சாலை தரமாக போடப்பட்டதா எனவும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.ஆய்வின்போது செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சந்தானம், ஒன்றிய பொறியாளர் பால் எபினேசர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.