| ADDED : ஆக 17, 2024 07:55 PM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டியில், ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷ மகிமை கொண்ட பெருமை வாய்ந்த சிவதலங்களுள் பஞ்செட்டியும் ஒன்றாகும். நேற்று அந்த கோவிலில், சனி மஹா பிரதோஷ விழா நடைபெற்றது. மாலையில், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அகத்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனை நடந்தன. திரளான பக்தர்கள் சனி பிரதோஷ விழாவில் பங்கேற்று சிவனை வழிப்பட்டனர்.அரியதுரை வரமூர்த்தீஸ்வரர், சுண்ணாம்புகுளம் காளத்தீஸ்வரர், புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தன.