உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பு இல்லாத ஓடை கால்வாய் மழைக்கு முன் சீரமைக்க கோரிக்கை

பராமரிப்பு இல்லாத ஓடை கால்வாய் மழைக்கு முன் சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் பகுதியில் இருந்து தடப்பெரும்பாக்கம், பொன்நகர், கொக்குமேடு வரை, 2 கி.மீ., தொலைவிற்கு ஓடைக்கால்வாய் உள்ளது.மழைக்காலங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மேற்கண்ட ஓடைக்கால்வாய் வழியாக வெளியேறுகிறது. இந்நிலையில் கால்வாயில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு அவை அகற்றப்படாமல் இருக்கிறது. நீர்நிலை பாதுகாப்பு குழுவினரும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் நடவடிக்கை இல்லை.ஆக்கிரமிப்புகளால் கால்வாய் சுருங்கி வருவதுடன், தற்போது ஆகாயத்தாமரை, கோரைபுற்கள் சூழ்ந்து பராமரிப்பு இன்றி கிடக்கிறது.மேற்கண்ட கால்வாய் பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ளது. சமீபத்தில் சாலையோரங்களை சுத்தம் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டது.அப்போது செடி, கொடி, குப்பை ஆகியவற்றை ஜே.சி.பி., இயந்திரங்களில் குவித்து கால்வாயில் தள்ளியது. இந்த சாலையில் உணவகங்கள், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், அதன் கழிவுகளை நேரிடையாக கால்வாயில் திறந்து விடுகின்றன.கடந்த ஆண்டு மழையின்போது, துார்வாரும் பணிகளும் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டன.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கால்வாய் பராமரிப்பு இன்றி கிடப்பதால், மேற்கண்ட செயல்களால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும்.கால்வாயை உரிய அளவீடு செய்து, துார்வாரி பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி