உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சின்னம்மாபேட்டையில் மின்வெட்டு நான்கு நாட்களாக பகுதிவாசிகள் அவதி

சின்னம்மாபேட்டையில் மின்வெட்டு நான்கு நாட்களாக பகுதிவாசிகள் அவதி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், பெரியகளக்காட்டூர் ஊராட்சிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தொடர்ந்து நான்கு நாட்களாக பகல், இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு தொடர்வதால், பகுதிவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில், மூன்று -- நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்கிறது.இதனால், மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் துாக்கத்தை தொலைத்து, கடும் சிரமப்படுகின்றனர்.மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறுகின்றன. இதனால் மேற்கண்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.இந்நிலையில் சீரான மின்வினியோகத்திற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அவர்கள் புலம்புகின்றனர்.மாவட்ட மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை