உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர்: மழையால் குண்டும், குழியுமாக சேதமடைந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சிவ விஷ்ணு கோவில் தெருவில் இருந்து பத்மாவதி நகர் செல்லும் சாலை பிரிகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள இச்சாலை வழியாக, இரண்டு தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும், பள்ளிகள் அருகில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் குடியிருப்புவாசிகள் என, இச்சாலையை தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்டவைகளும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், இச்சாலை குண்டும், குழியுமாக மாறி சேதமடைந்து விட்டது. மேலும், சாலை முழுதும் ஏற்பட்ட பள்ளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால், இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வோர், பாதசாரிகள் மற்றும் மாணவ, மாணவியர் கடும் சிரமப்படுகின்றனர். சிலர் பள்ளத்தில் தவறி விழுந்து, காயமடைந்து வருகின்றனர்.எனவே, சேதமடைந்த சாலையை திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ