உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் மெகா பள்ளம் பகுதிவாசிகள் கடும் அவதி

நெடுஞ்சாலையில் மெகா பள்ளம் பகுதிவாசிகள் கடும் அவதி

திருவள்ளூர்:சென்னை - பெங்களூர் அதிவிரைவு நெடுஞ்சாலையில் உள்ளது செட்டிப்பேடு. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இந்த ஊராட்சி வழியாக திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம், நேமம் வழியாக வெள்ளவேடு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் சென்று வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தினமும் தனியார் தொழிற்சாலைக்கு வரும் வாகனங்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில் உள்ள இணைப்பு சாலை பகுதியில் நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து மெகா பள்ளமாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் அதிவிரைவு நெடுஞ்சாலையிலிருந்து செட்டிப்பேடு ஊராட்சிக்கு செல்லும் வாகனங்கள் சேதமடைந்த சாலையில் மெதுவாக செல்வதால் சில நேரங்களில் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சேதமடைந்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை