உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆண்டார்மடம் வளைவுப்பகுதியில் விபத்து தவிர்க்க சாலை விரிவாக்கம்

ஆண்டார்மடம் வளைவுப்பகுதியில் விபத்து தவிர்க்க சாலை விரிவாக்கம்

பொன்னேரி: பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டார்மடம் பகுதியில், மூன்று இடங்களில் சாலை வளைவாக அமைந்து உள்ளது.வேகமாக செல்லும் வாகனங்கள் வளைவுகளில் திரும்பும்போது விபத்துக்களில் சிக்குகின்றன. வளைவுப்பகுதிகளில், காவல்துறையினர், இரும்பு டிரம்களில் மண்நிரப்பி, மீடியன் போன்று, வரிசையாக வைத்து எச்சரிக்கை செய்து உள்ளனர்.அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள், இரும்பு டிரம்களை சேதப்படுத்தி விடுகின்றன.இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 60 லட்சம் ரூபாய் செலவில் ஆண்டார்மடம் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது. தற்போது மாநில நெடுஞ்சாலை, 7 மீ. அகலத்தில் உள்ளது. கூடுதலாக 7 மீ. அகலத்திற்கு, 300மீ. நீளத்திற்கு சாலை விரிவாக்கம் மேற்கொள்ளும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.சாலை ஓரங்களில் இருந்த, கருவேல மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மண் கொட்டி சமன்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை