உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாத்துக்குடி கிலோ ரூ.30

சாத்துக்குடி கிலோ ரூ.30

சென்னை: ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் சாத்துக்குடி விளைகிறது. இங்கு, தோல் தடிமனான மற்றும் மெல்லிய சாத்துக்குடி ரகங்கள், இரண்டு பருவங்களில் விளைகின்றன. தற்போது, தோல் தடிமனான சாத்துக்குடி சீசன் களைகட்ட துவங்கியுள்ளது.கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆந்திராவில் இருந்து சாத்துக்குடி வரத்து அதிகரித்து உள்ளது.கோயம்பேடு சந்தையில் கிலோ சாத்துக்குடி 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இவற்றை வாங்கி செல்லும் சிறுமொத்த வியாபாரிகள், பல்வேறு மார்க்கெட்டுகள் மட்டுமின்றி சாலையோரங்கள், தள்ளுவண்டிகள், வாகனங்களில் வைத்து 3 கிலோ 100 ரூபாய்க்கு, அவற்றை விற்பனை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை