உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கும்மிடிப்பூண்டி : சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராம பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.அந்த குடியிருப்பு பகுதி யின் கழிவுநீர், தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படுகிறது. அந்த கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேற வழி ஏற்படுத்தவில்லை.அதனால், அதே பகுதியில் தாழ்வாக உள்ள பகுதியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி, தேசிய நெடுஞ்சாலையிலும், அதை ஒட்டிய இணைப்பு சாலையிலும் தேங்கி நிற்கிறது.இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிப்பதுடன், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. கால்வாயில் சேகரமாகும் கழிவுநீரை வெளியேற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை