| ADDED : ஆக 13, 2024 09:10 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. இவருக்கு பார்வதி, 36 என்ற மனைவி மற்றும்இரண்டு குழந்தைகள் உள்ளனர்.சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த, 10 ஆண்டாககாய்கறி வியாபாரம்செய்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்வரி, 36 என்பவருடன் சுரேஷிற்கு தொடர்பு ஏற்பட்டு, 2008ல் புட்லுார் கோவிலில் 2வது திரு மணம் செய்து கொண்டார்.இதனால் ராஜேஷ் வரிக்கும், பார்வதிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த, 9ல் பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் ராஜேஷ்வரி மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் தீக்காயமடைந்த ராஜேஷ்வரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.திருவள்ளூர் நகர போலீசார் பார்வதி, சுரேஷ் மற்றும் உறவினர்கள் ஆறு பேரை கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிந்து புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று முன்தினம் மாலை சிகிச்சைபலனின்றி இறந்தார்.