உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரண்டு கோவில்களின் உண்டியல்களில் திருட்டு

இரண்டு கோவில்களின் உண்டியல்களில் திருட்டு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த சுப்பாரெட்டிப்பாளையம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி மற்றும் சாய்பாபா கோவில்கள் அருகருகே உள்ளன. நேற்று முன்தினம் கோவில்களில் பூஜைகள் முடிந்து பூட்டப்பட்டன.நேற்று காலை கோவில்களை திறக்க வந்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல்களும் உடைக்கப்பட்டு, பணம் திருடுபோனது தெரிந்தது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார், தடயவில் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ