உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பீரகுப்பம் அரசு மருத்துவமனையில் தினமும் மருத்துவர் வருவதில் தாமதம்

பீரகுப்பம் அரசு மருத்துவமனையில் தினமும் மருத்துவர் வருவதில் தாமதம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பீரகுப்பம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம், டி.சி. கண்டிகை, வி.கே.என்.கண்டிகை, சிறுகுமி, வி.கே.ஆர்.புரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும், 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் காலதாமதமாக வருகின்றனர். இதனால் நோயாளிகள் மருத்துவர்கள் வரும் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது.இது குறித்து, நோயாளிகள் கூறியதாவது:பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்கள், சில நேரங்களில் கர்ப்பிணியருக்கு பிரசவம் பார்க்கின்றனர். நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால், நோயாளிகளை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே நோயாளிகள் நலன் கருதி மாவட்ட சுகாதார துறையினர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, பீரகுப்பம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும், மருத்துவர்கள் பணிபுரியும் வகையில் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை