உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் சிக்கிய வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு

விபத்தில் சிக்கிய வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு

கடம்பத்துார்: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு ஊராட்சி.ஸ்ரீபெரும்புதுாரில் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன், நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தில் 77.11 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது.இதனால் இப்பகுதியில் உள்ள திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை வழியே சென்று வந்த அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் காட்டு கூட்டு சாலையில் திருப்பி விடப்பட்டு மண்ணுார், நெமிலி வழியாக சென்று வருகின்றன.இதில், காட்டு கூட்டு சாலையில் மாற்றுப்பாதையில் செல்லவும் என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கை பதாகை மீறி வரும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த எச்சரிக்கையை மீறி வெளி மாநில கனரகலாரி ஒன்று இந்த சாலையில் வந்த போது சிறுபாலம் கட்டும் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதனால் இவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்லும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து கனரக லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது. இவ்வாறு எச்சரிக்கையை மீறி வரும் கனரக வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என பகுதிவாசிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி