உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை

வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை

திருவள்ளூர்:வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி மாணவர் சேர்க்கை வரும், 31 வரை நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வடகரை ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்கல்வி பெறுவதற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், மின்பணியாளர், மோட்டார் வாகன பிரிவுகளிலும்; 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், வெல்டர், கம்பியாளர் ஆகிய பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம்.மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் இருபாலரும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு வயது 14-40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். பயிற்சிக்கட்டணம் இல்லை.பயிற்சியில் சேரும் அனைவருக்கும் அரசின் அனைத்து உதவி தொகையும் வழங்கப்படும். நேரடி சேர்க்கைக்கு, முதல்வர், ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடகரை, செங்குன்றம், சென்னை -52 என்ற முகவரியில் நேரில் உரிய அசல் சான்றுகளுடன் அனுகலாம். தொடர்புக்கு 044 -29896032 மற்றும் 94440 09046 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ