மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
12 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
12 hour(s) ago
பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், ஆண்டார்மடம், இடையன்குளம் ஆகிய பகுதிகளில், அபாயகரமான சாலை வளைவுகள் உள்ளன.இவை, 'எஸ்' வடிவில் இருப்பதால், வாகனங்கள் வளைந்து வளைந்து பயணிக்கின்றன. வேகமாக பயணிக்கும் வாகனங்கள், வளைவுகளில் திரும்பும்போது தடுமாற்றம் அடைகின்றன. மேலும், சாலையோர புதர்களால், எதிரே வரும் வாகனங்களும் சரியாக தெரிவதில்லை.இதன் காரணமாக, இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், சாலையின் நடுவில் இரும்பு டபராக்களை வைத்து எச்சரிக்கை செய்யப்படுகிறது.மேலும், வாகனங்கள் வளைவில் வேகமாக திரும்பும்போது, அவற்றை இடித்துதள்ளி சேதப்படுத்துகின்றன. மாநில நெடுஞ்சாலையில், ஆண்டார்மடம் - பழவேற்காடு இடைப்பட்ட பகுதியில், ஐந்து இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன.தற்போது, ஆண்டார்மடம் பகுதியில் மட்டும் விபத்துகளை தவிர்க்க சாலை விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற வளைவுகளிலும் விரிவாக்கம் செய்து, மீடியன்கள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 hour(s) ago
12 hour(s) ago