| ADDED : ஜூன் 24, 2024 11:31 PM
பொன்னேரி : பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர்.ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியரின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக, அங்கு ரயில்வே நிர்வாகத்தின் 'பார்க்கிங்' பகுதி உள்ளது.பயணியர் சிலர் தங்களது இருசக்கர வாகனங்களை 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்துவதை தவிர்க்கின்றனர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில், குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இதனால், ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதி வழியாக பயணியர் சென்று வரும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.மேலும் இவற்றின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில், 'பார்க்கிங்' அல்லாத பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஐந்து பைக்குகள் திருடுபோனது.பயணிருக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் திருடுபோவதை தவிர்க்க, இருசக்கர வாகனங்களை அனுமதிக்கப்பட்ட 'பார்க்கிங்' பகுதியில் மட்டும்நிறுத்த ரயில்வே நிர்வாகம் மற்றும் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.