உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

ஞாயிறு ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வார்டு உறுப்பினர்கள் போராட்டம்

சோழவரம்,:சோழவரம் ஒன்றியம், ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட ஞாயிறு, பசுவன்பாளையம், புதுகுப்பம் கிராமங்களில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிராமவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறி, நேற்று ஞாயிறு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சதிஷ்குமார், கலா, மனோன்மணி சாரங்கன் ஆகியோர் சோழவரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பி.டி.ஓ., அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். வார்டு உறுப்பினர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தனர்.இது குறித்து வார்டு உறுப்பினர் சதிஷ்குமார் கூறியதாவது:ஞாயிறு ஊராட்சியில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், 1.19 கோடி ரூபாயில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள், பைப்லைன் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மேல்நிலை தொட்டிகள் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை