உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல்

 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் மூலம், மானியத்தில் செயற்கை கருவூட்டல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறையால், தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தின் வழியாக பசு மற்றும் எருமைகளுக்கு, கால்நடை நிலையங்களில் செயற்கை முறை கருவூட்டல் சேவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்,தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ், பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள், அனைத்து கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதன் மூலம், 85 சதவீதம் வரை கிடாரி கன்று பிறக்க வாய்ப்பு உள்ளது. இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்துவதற்காக, அரசு மானிய விலையில் உறைவிந்து குச்சிகள் வழங்கப்படுகின்றன. செயற்கை முறை முதல் கருவூட்டலுக்கு 175 ரூபாய், இரண்டாம் முறை 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். விபரங்களுக்கு, அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களை அணுகி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை