உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மாணவ - மாணவியருக்கு ஒரு மாதத்தில் சைக்கிள்

 மாணவ - மாணவியருக்கு ஒரு மாதத்தில் சைக்கிள்

திருவாலங்காடு: பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் ஒரு மாதத்தில் வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு கல்வித் துறை மூலம், ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்தாண்டு 20,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில் முதற்கட்டமாக, 50 சதவீத சைக்கிள்கள் வந்துள்ளன. இதுகுறித்து, கல்வி அலுவலர் கூறியதாவது: மிதிவண்டிகளின் அனைத்து பாகங்களும் தனித்தனியாக கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை இணைக்கும் பணி, திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி பகுதிகளில் நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும், அரசு உத்தரவுடன் ஒரு மாதத்தில் மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை