உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருத்தணியில் பைக் திருட்டு

 திருத்தணியில் பைக் திருட்டு

திருத்தணி: திருத்தணி அடுத்த செருக்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 26. இவர் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் முன் ஸ்கூட்டி பைக்கை நிறுத்தி விட்டு துாங்க சென்றார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு எழுந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. பத்மநாபன் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதே ஊரில், கடந்த மூன்று நாட்களில் மூன்று இரு சக்கர வாகனங்கள் திருடு போனதால் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி