மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை விரிவாக்கம் ரூ.1 கோடியில் பணி துவக்கம்
16 minutes ago
செயல்படாத சிக்னல்கள் மக்கள் வரிப்பணம் வீண்
17 minutes ago
ஆறு வயது சிறுவனை கடத்த முயன்ற நபர் கைது
19 minutes ago
ஆவடி: புடவையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் கழுத்து இறுகி, 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி, சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் சதீஷ், 43; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி மீனா, 38. இவர்களது மகள் பவ்யஸ்ரீ, 15. மகன் ஹரிஹரன், 13. ஹரிஹரன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சில தினங்களுக்கு முன், மீனாவின் உறவினர் நந்தினி என்பவர், குழந்தை பெற்றுள்ளார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்க, நந்தினி, அடிக்கடி சென்னை வந்து சென்றுள்ளார். அதற்காக, சதீஷ் வீட்டின் முதல் மாடியில், புடவையில் தொட்டில் கட்டி வைத்திருந்தார். அந்த தொட்டிலில், நேற்று முன்தினம் இரவு ஹரிஹரன் விளையாடியபோது, புடவை கழுத்தில் இறுகி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
16 minutes ago
17 minutes ago
19 minutes ago